April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கேம்ஃபோர்ட் சர்வதேச பள்ளி சார்பாக நிலவைத் தொடும்’ உத்வேகச் சிலை திறப்பு விழா!!

கோவை- மார்ச்:15

கோவையின் முக்கியப் பகுதியான ரேஸ்கோர்ஸ் காஸ்மோபாலிட்டன் கிளப் சந்திப்பு அருகே,மாணவர்களின் லட்சியக் கனவுகளைப் பிரதிபலிக்கும் வகையிலான பிரம்மாண்டமான (Dream Beyond) எனும் கருத்துரு சிலை திறக்கப்பட்டுள்ளது.தி கேம்ஃபோர்ட் இன்டர்நேஷனல் பள்ளி சார்பில் அமைக்கப்பட்ட இந்தச் சிலை திறப்பு
விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன்,ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிலையை திறந்து வைத்தனர்.

உலக உருண்டையின் மீது நின்றுகொண்டு,இரண்டு சிறுவர்கள் ஒரு கயிற்றின் மூலம் நிலவைத் தங்களை நோக்கி இழுப்பது போல் எல்லைகளை தாண்டி கனவு காணுங்கள் எனும் கருத்துருவோடு இந்தச் சிலை கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.இது கடின உழைப்பு,விடாமுயற்சி மற்றும் எல்லைகளைத் தாண்டிச் சாதிக்கும் மனப்பான்மையைக் குறிக்கிறது.

இது குறித்து கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளித் தலைவர் அருள் ரமேஷ் மற்றும் தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் ஆகியோர் கூறுகையில்,அறிவாற்றல்,மன உறுதி மற்றும் நற்பண்புகள் இருந்தால் எட்ட முடியாத கனவு என்று எதுவுமே இல்லை என்பதை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் உணர்த்துவதே இச்சிலையின் நோக்கம்” எனத் தெரிவித்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp