February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரியில்ஐ போன் இவ்வளவு குறைந்த விலையா இன்ஸ்டா மோகத்தால் பொது மக்கள் தலையில் விழுந்த இடி

கிருஷ்ணகிரி கே ஆர் பி டேம் நட்டாற்றில் நடந்த இன்ஸ்டா நாடகம் ஐ போன் விலை ரூபாய் 5000
இன்ஸ்டா விளம்பரம் பார்த்து
வண்டியை நேராக
எம் ஜி மொபைல்ஸ் கடைக்கு விடு மாப்பிள்ளை என்று கிளம்பிய பொதுமக்கள்
இது குறித்து மேலும் பல திடுக்கிடும் தில்லாலங்கடி தகவல்கள் இதோ

விதிகளை மீறி பாதுகாப்பில்லாமல் கேஆர்பி அணையில் படகில் சென்று பில் இல்லாத விலை உயர்ந்த செல்போன்களுக்கு இன்ஸ்டா விளம்பரம்? நடவடிக்கை எடுக்குமா காவல்துறை??

கிருஷ்ணகிரி பெங்களூர் சாலையில் எம்.ஜி.மொபைல்ஸ் என்ற மொபைல் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக விலை உயர்ந்த ஐபோன் உள்ளிட்ட மொபைல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஐபோன் செல்போன்களை இந்த கடையில் சில ஆயிரத்திற்கு விற்பனை செய்து வருகிறார்கள். இந்த செல்போன்கள் எங்கிருந்து வருகிறது அதற்கான பில், என எந்தவித ரசீதும் இல்லாமல் விற்கப்படுகிறது. இந்த நிலையில் இதற்கான விளம்பரங்களை கௌரி என்கிற பெண் ஒருவர் வீடியோ எடுத்து விளம்பரப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தான் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் பின்புறம் மீன்வளத்துறைக்கு சொந்தமான இடத்தில் விதிகளை மீறி பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் அணியாமல் படகில் சென்று செல்போன்களை படகில் வைத்து விளம்பரப்படுத்தும் வீடியோ ஒன்றை எடுத்து அவரது இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இதுபோன்று அனுமதி இல்லாமல் பொது இடங்களில் ஆபத்து நிறைந்த பகுதிகளில் வீடியோ எடுத்து வெளியிடுபவர்களை தடுக்க வேண்டும் எனவும் அதேபோல் மீண்டும் நடைபெறாமல் இருக்க அவர்களுக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Facebook
YouTube
Instagram
WhatsApp