கிருஷ்ணகிரி மாவட்டம்
சக்கில்நத்தம் கிராமத்தில் எருது விடும் விழாவினை ரத்து செய்ய வலியுறுத்தி சமுக ஆர்வாளர் சந்திரமோகன் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கரிடம் மனு கொடுத்தார்.
……………………………………………………….
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள சக்கில்நந்தம் கிராமத்தில் எருது விடும் விழா வருகின்ற மார்ச் மாதம் நடைப்பெற உள்ளதாக தெரிகிறது.
இந்த எருது விடும் விழாவினால் இரு சமுதய மக்களிடையே பிரச்சனை ஏற்படும் என்பதால் இந்த எருது விடும் விழாவினை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சக்கில்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர்கள்
சமுக ஆர்வாளர்
டாக்டர் சந்திரமோகனிடம்
மனு கொடுத்தனர்.
இதனை அடுத்து
டாக்டர் சந்திரமோகன்
சக்கில்நத்தம் கிராமத்தை தேர்தவர்களுடன் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சங்கர்
அவர்களை நேரில் சந்தித்து சக்கில்நத்தம் கிராமத்தில் நடைப்பெற உள்ள எருது விடும் விழாவினை ரத்து செய்ய வேண்டுமாறு வேண்டி கோரிக்கை மனுவினைக் கொடுத்தார்.
மேலும் கடந்த ஆண்டு நடைப்பெற்ற எருது விடும் விழாவில் இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட தகராறில் பெரும் கலவரமாக மாறியது,
ஆகையால் மீண்டும் இந்த ஆண்டு எருது விடும் திருவிழாவினை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது,
ஆகையால் இரு சமுதாய மக்களிடை பிரச்சனை ஏற்படும் முன் இந்த எருது விடும் விழாவினை ரத்து செய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும் என
டாக்டர் சந்திரமோகன் வலியுறுத்தினார்.
மாவட்ட செய்தியாளர் கவியரசு

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!