April 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி: மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் தலைமையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி – மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்பு.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 – “தேர்தல் திருவிழா தமிழகத்தின் பெருவிழா” நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர்கள் 100% வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்துக்கொண்ட இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (24.03.2026) நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்.கவிதா அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.பெ.தங்கதுரை, ஓசூர் மாநகராட்சி ஆணையர்.முகமது ஷபீர் ஆலம் இ.ஆ.ப. உள்ளிட்ட பலர் உள்ளனர்

Facebook
YouTube
Instagram
WhatsApp