கோவை -மார்ச்:17
கோவை மாவட்டம் காரமடை அருகே டீச்சர்ஸ் காலனி பகுதியில் மேட்டுப்பாளையம், அன்னூர்,கோவை வடக்கு ஆகிய வருவாய்த்துறை வட்டத்திற்குட்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கோவை வடக்கு மாவட்ட கோட்டாட்சியர் வினோத்குமார் வரவேற்புரை ஆற்றினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமை தாங்கினார்.
காரமடை நகர மன்ற தலைவர்கள் உஷா வெங்கடேஷ்,கூடலூர் அ.அறிவரசு ஆகியோர் முன்னிலை வகித்தார்.
விழாவில் பல்வேறு அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள்,திமுக நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி,கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ.பா.அருண்குமார்,தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம்,காரமடை நகர செயலாளர் கே.ஜி.குரு பிரசாத், ஒன்றிய செயலாளர்கள் சு.சுரேந்திரன்,எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம்,சிறுமுகை பேரூராட்சி உதயகுமார்,தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரஸ் குமார் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள்,பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.இறுதியில் அனைத்து பயனாளிகளுக்கும் கூடலூர் நகரத் தலைவர் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கப்பட்டது.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election