February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்னணு ஒப்பந்தப்புள்ளி மூலம் 3 ஏரிகளில்மீன்பாசி குத்தகை நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தகவல்.

கள்ளக்குறிச்சி ஜன 10

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி வட்டத்தில் ஆலத்தூர் மற்றும் தென்கீரனூர் ஆகிய 2 ஏரிகள், சங்கராபுரம் வட்டத்தில் தேவபாண்டலம் ஏரியும் மொத்தம் 3 ஏரிகள் www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் மின்னணு ஒப்பந்தப்புள்ளி மூலம் 3 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகை விடப்பட உள்ளன.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், நெ.62/56A, தாட்கோ வளாகம், விழுப்புரம்-605 602,
fishermenwelfarevpm@gmail.com என்ற இணையதளத்திலும், 04146-259329 என்ற
தொலைபேசி எண்ணிலும், விழுப்புரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp