முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஈரோடு எம்பி பிரகாஷ் துவக்கி வைத்தனர்..
ஈரோடு. ஜன. 13

கரூரில் இருந்து சிவகிரி வழியாக பெருந்துறைக்கு புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கப்பட்டுள்ளது.
கரூர் முதல் பெருந்துறை வரை உள்ள, கொடுமுடி, சிவகிரி, அரச்சலூர், வெள்ளோடு உள்ளிட்ட பல ஊர்களுக்கு பேருந்து வசதி வேண்டும் என அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் உத்தரவின் பெயரில், கரூர் முதல் பெருந்துறை வரை கொடுமுடி, சிவகிரி, அரச்சலூர், வெள்ளோடு வழிதடத்தில் புதிய பேருந்து இயக்க அரசாணை வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி புதிய வழித்தடத்தில் கொடிய சித்தி பேருந்தை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து அந்தப் பேருந்து ஈரோடு மாவட்டம் சிவகிரி வந்தபோது அந்தப் பேருந்தை ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் வரவேற்றார். பின்னர் பேருந்து அறச்சலூர், வெள்ளோடு வழியாக பெருந்துறை சென்றடைந்தது.
நீண்ட நாள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அந்த வழிதடத்தில் புதிய பேருந்து இயக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த ஊர்களின் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிவகிரி பேரூராட்சி தலைவர் பிரதீபா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!