February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

எக்ஸ்னோரா கிளை சார்பில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி…!

வந்தவாசி, டிச 04:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி – வெண்குன்றம் தவளகிரீஸ்வரர் மலைக்கோவிலில் நேற்று நடைபெற்ற திருக்கார்த்திகை தீப திருவிழாவில் வந்தவாசி எக்ஸ்னோரா கிளை சார்பில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காவல் துறை ஆய்வாளர் செ.பாலு தொடங்கி வைத்தார். நிகழ்விற்கு எக்ஸ்னோரா கிளை தலைவர் சு.தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் பா.சீனிவாசன், க.வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் எஸ்.வினோத் குமார் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா கிளை நிர்வாகிகள் மலர் சாதிக், க.பூபாலன், இரா.பாஸ்கரன், இரா.அருள்ஜோதி, ஆசிரியர் மணி, வந்தை குமரன், மனோஜ் குமார், ஒன்றிய செயலாளர் பெருமாள், அறங்காவலர் குழு தியாகராஜன், மகாவீர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர்‌ பங்கேற்றனர். இறுதியில் கிளை பொருளாளர் அ.பூவிழி நன்றி கூறினார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp