April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மேற்கு தொகுதி தேர்தல் பிரச்சாரம்..

தன்னிடம் குறைகளை முறையிட்ட மூதாடியிடம் கருணை காட்டிய திமுக வேட்பாளர் சு. முத்துசாமி..

ஈரோடு. ஏப்ரல். 04

ஈரோடு மேற்கு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்னிடம் குறைகளை சொல்லி முறையிட்ட மூதாட்டி இடம் கருணையோடு விசாரித்து உதவிய ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் சு. முத்துசாமி.

இந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் களம் சூடு முடிக்கப்பட்டு விறுவிறுப்பாக உள்ளது.

அரசியல் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து அவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளராக, அறிவிக்கப்பட்டுள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் வேட்பாளர் அமைச்சர் சு. முத்துசாமி தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை திமுக தலைவரும் முதலமைச்சர் ஆன மு க ஸ்டாலின் திங்கள் பகுதியில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அன்றைய தினமே ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் சு. தனது வேட்பு மனுவை கோட்டாட்சியர் சிந்துஜாவிடம் தாக்கல் செய்தார்கள்.

நேற்று காலை 7 மணி அளவில் சின்ன வலசு மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

தொடர்ந்து வேட்பாளர் சு. முத்துசாமி, சின்ன வலசு மாரியம்மன் கோவில், பதினாறாம் நம்பர் ரோடு, முத்து மாரியம்மன் கோவில், க. வலசு வடக்கு இரண்டாவது வீதி மற்றும் மூன்றாவது வீதி, நான்காவது, வீதி, ஐயன் காடு, கொத்து காரன் தோட்டம், மல்லி நகர், நெசவாளர் காலனி, கந்தையன் தோட்டம் உள்ளிட்ட தொகுதி சார்ந்த பல்வேறு இடங்களில் திமுக வேட்பாளர் அமைச்சர் முத்துசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது அவருக்கு தொகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று ஆதரவு தெரிவித்தனர்.

பிரச்சார பயணத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp