April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மேற்கு தொகுதி த மா கா வேட்பாளர் எம். யுவராஜ் தீவிர தேர்தல் பிரச்சாரம்..

தேர்தல் அலுவலகம் திறந்தபின் பிரச்சாரத்தை தொடங்கினார்..

ஈரோடு. ஏப்ரல். 02

அதிமுக, பாஜக கூட்டணியில் ஈரோடு மேற்குத் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் யுவராஜ் தனது தேர்தல் பிரச்சாரத்தை நேற்று துவக்கினார்.

வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி என்ன பட உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்களை வேட்பாளர்களை களத்தில் இறக்கி உள்ளது.

இந்த நிலையில் அதிமுக, பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு மேற்கு தொகுதியும் அதில் ஒன்று.

இதில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளராக உள்ள எம் யுவராஜ் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இதற்காக பல்வேறு தேர்தல் பணிகளை முன்னெடுத்து வரும் நிலையில், ஈரோடு அருகே உள்ள திண்டலில் கட்சியின் தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்த தேர்தல் அலுவலக திறப்பு விழா முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் எம் யுவராஜ் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்றும் நான் போட்டியிடும் ஈரோடு மேற்கு தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் தொண்டர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் திறந்தவெனில் ஈரோடு மேற்கு தொகுதி வாக்காளர் அவர்களிடம் அவர் வாக்கு சேகரித்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் அதிமுக, பாஜக, பாமக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp