அதிகாரிகளுக்கு எதிராக இரண்டு நாட்களாக நடைபெறுகிறது…
ஈரோடு. டிச. 24

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அலுவலக வளாகத்தில் கிராம உதவியாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகாவுக்கு உட்பட்ட ஈங்கூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் ஜெயந்தி., கிராம உதவியாளராக பணிபுரிந்து வருபவர் கனிமொழி. இவருக்கும் அலுவல் பணி காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் குறை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வந்துள்ளது.
ஒரே கிராமத்தில் பணியாற்றி வரும், கிராம நிர்வாக அதிகாரிக்கும், கிராம உதவியாளருக்கும் தங்களுக்குரிய பணி செய்வதில் இருவருக்கும் பனிப்போர் ஏற்பட்ட நிலையில் நாளடைவில் அது பெரிதாகி இருவரும் இணைந்து பணி செய்வதில சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி பொது மக்களுக்கு ஈங்கூர் கிராம நிர்வாக அலுவலகத்தின் மூலம் நடைபெற வேண்டிய பணிகள் தாமதமானது. இதன் காரணமாக பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.
இந்த தகவல் அறிந்த மொடக்குறிச்சி வட்டாட்சியர் சிவசங்கரன் இருவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் இருவரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஈங்கூர் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் கனிமொழி, கிராம உதவியாளர்கள் சங்கத்தின் மொடக்குறிச்சி வட்ட தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
தொடர்ந்து மொடக்குறிச்சி வட்டாட்சியர் சிவசங்கரனின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மொடக்குறிச்சி வட்டத்தை சேர்ந்த சுமார் 150 க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக உதவியாளர்கள், மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்தப் போராட்டம் தொடர்பாக ஈரோடு போட்டாச்சு தலைவர் சிந்துஜா நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அந்தப் பேச்சு வார்த்தையும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராத பட்சத்தில் கிராம உதவியாளர்களின் காத்திருப்பு போராட்டம் நேற்றுடன் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!