April 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி__ கொடுமுடி பகுதிகளில் விலையில்லா இலவச வீட்டு மனை பட்டா வழங்கல்

616 நபர்களுக்கு அமைச்சர் சு. முத்துசாமி வழங்கி சிறப்பித்தார்..

ஈரோடு. மார்ச்.. 05

ஈரோடு மாவட்டம் கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு விலையில்லா இலவச வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், பொதுமக்களுக்கு விலையில்லா இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி பகுதிகளில் நடைபெற்றது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட பயனாளிகள் 392 நபர்களுக்கு, மொடக்குறிச்சி கிருஷ்ணா மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சு. முத்துசாமி கலந்து கொண்டு விலையில்லா இலவச வீட்டு மனைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் கரட்டாம் பாளையம் சமுதாய கூடத்தில் நடைபெற்ற விழாவில் 224 பயனாளிகளுக்கு விலையில்லா இலவச வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர் சு. முத்துசாமி வழங்கினார்.

இந்த இரு நிகழ்ச்சிகளிலும் சேர்த்து மொத்தம் 616 விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர்சு. முத்துசாமி வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி மாவட்ட வருவாய் அலுவலர்சு. சாந்தகுமார் மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சு. குணசேகரன், பேரூர் செயலாளர் சரவணன், மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவர் செல்வம் பால் சரவணன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சூரியமூர்த்தி, சிவகிரி பேரூராட்சி தலைவர் பிரதீபா, அரச்சலூர் பேரூராட்சி தலைவர் விஜயகுமார் மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு. உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp