February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி..

மாவட்ட சமூகநலத்துறை — காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது..

ஈரோடு. 08

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை மற்றும் ஈரோடு காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளையின் சார்பில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கெம்பநாயக்கன்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கான சமுதாய விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு, போதை ஒழிப்பு, தலைக்கவசம் அணிவதின் அவசியம் மற்றும் இளம் வயது திருமணம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முன்னதாக விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் கெம்பநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஈரோடு காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சாந்தா தேவி மாணவ மாணவிகளுக்கு இடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் ஈரோடு காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளை சிறப்பாக செய்திருந்தது.

Facebook
YouTube
Instagram
WhatsApp