தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள், நேற்று சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில், பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கான, அமைக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகளுடன் கூடிய உழைப்பாளர் நலக்கூடங்களை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ச. கந்தசாமி, ஈரோடு மாநகராட்சி மணிக்கு உண்டு, எல்லை மாரியம்மன் கோவில், நேதாஜி சாலையில் அமைக்கப்பட்டுள்ள தொழிலாளர் நலக்கூடத்தை கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கி, பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அந்தியூர் எம்எல்ஏ ஏ ஜி வெங்கடாசலம், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் வி செல்வராஜ், தொழிலாளர் உதவி ஆணையாளர் ( சமூக பாதுகாப்பு திட்டம் ) ஜெயலட்சுமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் விழாவில் பங்கேற்றனர்.
ஈரோடு கட்டுமான தொழிலாளர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கல்

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election