340 மனுக்கள் வரப்பெற்ற நிலையில் மேல் நடவடிக்கைக்கு உத்தரவு…
ஈரோடு. பிப்.. 03
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 340 மனுக்கள் வரப்பெற்று மேல் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வாரம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்களின் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று காலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர்சு. சாந்தகுமார் தலைமை வகித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் கொடுத்தனர்.
அந்த வகையில் 340 மனுக்கள் வரப்பெற்ற நிலையில் மேல் நடவடிக்கைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் மனுக்களில், இலவச வீட்டு மனை, வீட்டுமனை பட்டா, மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்தும் முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை, கல்விக்கடன், மற்றும் தங்கள் பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கேட்டும் மனுக்கள் கொடுத்தனர்.
மேலும் காவல்துறை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்தும், முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.
கூட்டத்தில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!