அரியலூர் மாவட்டம் திருமானூர் நகர் பகுதியில் அரசு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன், உரம் உள்ளிட்ட விவசாய இடுப்பொருட்கள் வழங்கப்படுவதுடன் சுய உதவிக் குழுவினருக்கு கடனும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது திருமானூர் பகுதியில் சம்பா சாகுபடி செய்துள்ள நிலையில் அதற்கான உரம் உள்ளிட்ட விவசாய இடுப்பொருட்கள் பயிர் கடன் உள்ளிட்டவை கேட்டு விவசாயிகள் விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த சில வாரங்களாக உரம் மற்றும் பயிர் கடன் வழங்காமல் சங்கத்தின் செயலாளர் ராஜ செல்வம் தாமதப்படுத்தி வந்துள்ளார். மேலும் சுய உதவி குழு பெண்களுக்கு முறையாக கடன் வழங்காமலும் வழங்கிய கடனுக்கு உரிய நேரத்தில் வட்டி கணக்கீடு செய்வதில் அலட்சியம் காட்டுவதால் தாமதமாக பணம் கட்ட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. உரிய நேரத்தில் வட்டியுடன் அசலும் கட்டாததால் அதற்கு அபராத தொகை செலுத்த வேண்டிய நிலையும் சுய உதவி குழு பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது இந்நிலையில் இவர் கடந்த 15ஆம் தேதி பணியிட மாற்றம் செய்து கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் ஆணை கொடுத்தும் இவர் இச்சங்கத்திலிருந்து செல்லாமல் இச்சங்கத்திலேயே பணிபுரிந்து வருவது விவசாயிகள் மற்றும் சுய உதவிக் குழுவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இவர் தொடர்ந்து இதே சங்கத்தில் பணி புரிந்தால் விவசாயிகள் மற்றும் சுய உதவி குழுவினருக்கு கிடைக்கக்கூடிய அனைத்து சலுகைகளும் திட்டங்களும் கிடைப்பதில் தாமதப்படுத்துவார் எனக் கூறி விவசாயிகள் சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் சங்கத்தின் முன்பு சங்கத்தை திறக்க விடாமல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
அரியலூர் – விவசாயிகளுக்கு முறையாக உரம் மற்றும் பயிர் கடன் வழங்காமல் சுய உதவிக் குழுவினரை அவதூறாக பேசும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளரை கண்டித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டுறவு வங்கியை திறக்க விடாமல் வங்கி முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!