விழுப்புரம் மாவட்டம்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் 19 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கானகால்பந்துவிளையாட்டுப் போட்டிகள்மயிலம் பவ்டா கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் செஞ்சி ஒன்றியம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11, 12ஆம்வகுப்பு படிக்கும் 18 பள்ளி மாணவிகள்கலந்து கொண்டு கால்பந்து போட்டியில்பங்கேற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுமாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
19.11.25 அன்று மாநில அளவில் நடைபெறும் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் மாணவிகள் செஞ்சியில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏவைநேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.மாநில அளவில் நடைபெறும் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.மேலும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை அவர் வழங்கினார்.இதேபோல் கலை திருவிழாவில் பரதநாட்டியத்தில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் பங்கேற்றம் மாணவிகளும் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்றனர்.
இதில் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார்,செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலிமஸ்தான், பள்ளி தலைமை ஆசிரியர் சச்சிதானந்தம், பள்ளி ஆசிரியர்கள் திருமலை, ஸ்ரீ திலிப், ஹாஜா பாஷா, உடர்கல்வி ஆசிரியர்கள் ஆனந்தராஜ், பழனிராஜ் , மாவட்டபிரதிநிதி அய்யாதுரை, தொண்டரணி பாஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!