February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரியில் SIR–ஐ கண்டித்து நாளை நவ.11 – “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிக்கை!

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் திமுக மாநில அமைப்பாளர் இரா. சிவா, காங்கிரஸ் தலைவர் வெ. வைத்திலிங்கம் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு. சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் முதன்மைச் செயலாளர் தேவபொழிலன், திராவிடர் கழகம் வீரமணி, மதிமுக மாநில செயலாளர் ஹேமா. பாண்டுரங்கன், மக்கள் நீதி மய்ய பொதுச் செயலாளர் சந்திரமோகன், சிபிஐ (எம்எல்) பாலசுப்ரமணியன், மனிதநேய மக்கள் கட்சி பஷீர்அகமது, இந்திய யூனியன் முஸ்லீம்லீக் தலைவர் முகமது அலி மற்றும் தோழமைக் கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: –
ஒன்றிய அரசின் கைப்பாவையாகவும், எதேச்சதிகாரப் போக்குடனும் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வு (SIR) கொண்டவந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற குளறுபடிகள் எதையும் களையாமல் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR திட்டத்தைச் செயல்படுத்துவது மக்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதாகவும், ஜனநாயகத்தை அடியோடு குழிதோண்டி புதைப்பதாகவும் உள்ளது. அத்துடன் தேர்தல் ஆணையத்தின் அவசரமே அதீத சந்தேகங்களை எழுப்புகிறது. சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு மூலம் புதுச்சேரியில் உள்ள உண்மையான வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிடுகிறது.
––2––

எங்கள் கூட்டணி கட்சிகள் எதிர்பார்த்தவாறே 4–ஆம் தேதியில் இருந்து இன்று வரை களத்தில் SIR பெரும்பாலான வாக்காளர்களை நீக்கப்படும் அச்சத்தை உறுதிபடுத்துகிறது. BLO–க்களும், BLA2க்களுக்கும் இடையே சரியான தகவல் தொடர்புகள் ஏற்படுத்தப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள 2002/2005 வாக்காளர் பட்டியல்கள் முழுமையற்றதாகவும், குழப்பம் விளைவிப்பதாகவும் அமைந்துள்ளன.
எனவே, இந்த SIR சீராய்வை தேர்தல் ஆணையம் உடனே கைவிடும்படி தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்தும் அதனை செவிமடுக்காமல் ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி, எதேச்சாதிகாரப் போக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம் புதுச்சேரியில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ளதை கண்டித்து, நாளை 11–ஆம் தேதி காலை 10 மணியளவில் புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று நமது எதிர்ப்பை பதிவு செய்வோம் வாரீர்! வாரீர் !!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
YouTube
Instagram
WhatsApp