சேலத்தில் திடுக்கிடும் பின்னணி.
25 வருடம் கழித்து 60 வயதில் கைது செய்த போலீஸ்.
35 வயதில் கள்ளக்காதலியை கொன்ற கூலி தொழிலாளி 25 வருடம் கழித்து 60 வயதில் கைது செய்த போலீஸ் திடுக்கிடும் பின்னணி.
திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணை அடித்துக் கொன்ற நபர் 25 வருடங்களுக்கு பிறகு போலீசில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். சுமார் 25 வருடங்களுக்கு முன்பு மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்வியல் புயல் வீசியது போல ஒரு சம்பவம் நடந்துள்ளது. தன்னுடைய விபரீத ஆசையால் தனக்கு இப்படி ஒரு துன்பம் நேரும் என்று ராணி கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார். ராணிக்கு அதே ஊரை சேர்ந்த கூலி தொழிலாளி நல்ல தம்பி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த ராணியின் கணவர் இருவரையும் கண்டித்ததால் கடந்த 2000 ஆம் ஆண்டில் ராணி நல்ல தம்பியுடன் இருந்த தொடர்பை துண்டித்துள்ளார்.
இதனால் நல்ல தம்பி ஆத்திரத்தில் இருந்த நிலையில் தொடர்ந்து ராணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு நாள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் ராணியை கட்டையால் தலையில் அடித்து நல்ல தம்பி கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு உடனே தப்பி சென்று தலைமறைவாகிவிட்டார். நீண்ட நாட்களாக நல்ல தம்பியை பிடிக்க முடியாமல் போலீசார் தேடி வந்தனர். இதனிடையே சொந்த ஊரை விட்டு வெளியே சென்ற நல்ல தம்பி ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை இங்கு வந்து தனது உறவினர்களை பார்த்து செல்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று உம்பிலிக்கம் பட்டிக்கு வந்த நல்ல தம்பியை (60) போலீசார் கைது செய்தனர். அவரை கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிட்டு உண்மைகள் வெளிவந்தது. அதாவது கடந்த 2000 ஆண்டில் தகாத உறவை துண்டித்துக் கொண்டதால் ராணியை கொலை செய்துவிட்டு ஆந்திராவுக்கு தப்பி சென்றுள்ளார். அங்கு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து காலத்தை கடத்தி வந்துள்ளார். அடிக்கடி சொந்த ஊருக்கு சென்று உறவினர்களை பார்த்து வந்ததாக போலீஸில் தெரிவித்துள்ளார். காதலியை கொலை செய்துவிட்டு தலைமறைவான கொலையாளியை 25 ஆண்டுகள் கழித்து போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!