February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி சமூக ஆர்வலர் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனு

தற்போது இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தும் மற்றும் சரிபார்ப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது புதுச்சேரி மாநிலத்தில் அந்தப் பணி தாங்கள் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது தற்போது அந்த பணியில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியர்கள் அந்தந்த பகுதியில் வேலை செய்யும் அங்கன்வாடி ஊழியரை வைத்து சில பகுதிகளில் கணக்கெடுக்கும் பணியும் சரிபார்ப்பு பணியும் நடைபெறுகிறது பல இடங்களில் தேர்தல் துறை மூலம் அங்கன்வாடி ஊழியர்கள் இல்லாமல் நேரடியாக அரசு ஊழியர்கள் சரிபார்ப்பு பணியில் விண்ணப்பம் கொடுக்கிறார்கள் அப்படி நேரடியாக அவர்கள் கொடுக்கும் போது சம்பந்தப்பட்டவர்கள் அந்த வீட்டில் இருந்தால் மட்டுமே கொடுக்க முடியும் என்று வாதிடுகிறார்கள் புதுச்சேரியில் வாக்காளர்களின் பாதிப்பேர் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தான் அவர்கள் நிரந்தரமாக அங்கு தற்போது இருக்க முடிவதில்லை அப்படி இருக்கும் பட்சத்தில் ஒருவர் இரண்டு வருடத்தில் வேறு வீட்டுக்கு குடி போயிருகிறார் ஆனால் அந்த பழைய விலாசத்தில் வரும் அலுவலர்கள் இருந்தால் மட்டுமே கொடுக்க முடியும் இல்லையென்றால் கொடுக்க முடியாது என்று சொல்லுகிறார்கள் அது புதுச்சேரியில் வாடகை வீட்டில் வசிப்பவர்களின் வாக்குரிமையை பறிக்கும் செயல் போல் உள்ளது அதனால் தற்போது வாக்கு படிவங்களை கொடுக்கும்போது அவர்கள் வேறு விலாசத்தில் வசிப்பதாக இருந்தால் அவர்களுக்கு நேரடியாக வந்து கொடுக்கும்போது படிவத்தை வடிவத்தின் பின்பக்கத்தில் தற்போது இருக்கும் விலாசத்தை முழுமையாக எழுதி படிவங்களை கொடுக்க வேண்டும் அப்படி கொடுக்கும் பட்சத்தில் அவர்கள் தற்போது இருக்கும் வீட்டிற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க உதவியாக அந்த விலாசத்தை வைத்து மாற்றி விடுங்கள் அதை விடுத்து அந்த விலாசத்தில் இருந்தால் மட்டுமே வடிவம் கொடுக்கப்படும் இல்லையென்றால் கொடுக்க முடியாது என்பது சொல்வது இந்திய குடிமகனாக வாக்குரிமை பறிப்பது மிகவும் தவறான குற்றச் செயலாகும் அதனால் மாவட்ட ஆட்சியர் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகிய நீங்கள் இதனை தயவு கூர்ந்து பரிசிளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்…

இவ்வாறு அசோக் ராஜா அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.

புதுச்சேரி மாநில செய்தியாளர் மணிகண்டன்.

Facebook
YouTube
Instagram
WhatsApp