தஞ்சாவூர் நவ 23.
தஞ்சாவூர் மாவட்டம்
பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு
வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பாக,
கள்ளக்குறிச்சி மாவட்டம். திருக்கோவிலூர் வட்டம் கனகந்தலை பகுதியில் வசித்து வந்தவர். திருமதி ஜாகிரா பேகம்.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணி பார்த்த கிராம உதவியாளர் தோழி. திருமதி. ஜாகிராபேகம் உயர் அலுவலர்களின் அழுத்தத்தினால், மன அழுத்தம் ஏற்பட்டு
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னால். தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
பணிச்சுமை நெருக்கடி காரணமாக இவ்வாறு நடந்துள்ளது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கண்டித்தம்,
இனிமேலாவது
அதிகார வர்க்கம் கொண்டவர்கள், ஊழியர்களின் நிலைமையை உணர்ந்து,
பணி செய்யும் அனைவருக்கும் தகுந்த கால அவகாசம் கொடுத்து, பணி செய்யவிட வேண்டும் என
கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.
பட்டுக்கோட்டையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க வட்ட தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார்.
வட்டச் செயலாளர் ம.செபஸ்டின் சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு வருவாய்த்துறை ஓய்வு பெற்ற மாநில பொதுச் செயலாளர் தோழர் .பிச்சைமுத்து முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்க மாநில பொருளாளர் .
வெங்கடாஜலபதி மற்றும்
மாநிலத் துணைத் தலைவர் .நல்லதம்பி,
மாநில செயற்குழு உறுப்பினர் பக்கிரிசாமி கோரிக்கை மற்றும் விளக்கவுரை ஆற்றினார்.
மற்றும் வட்ட பொறுப்பாளர்கள்.
பக்கிரிசாமி, பாப்பாத்தி, கண்ணன், ஜவஹர் பாபு, பாலசுப்பிரமணியன் மற்றும் ஏனைய முன்னணி ஊழியர்கள்,
தோழர்கள், தோழியர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக வட்டப் பொருளாளர் செந்தில்குமார் நன்றிய உரையாற்றினார்.
தஞ்சை மாவட்ட செய்தியாளர் மா.மதிவதனன்

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!