திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆண்டவர் கோவில் பகுதியில் மணப்பாறை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது அந்த வழியே வந்த டிப்பர் லாரியை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர், விசாரணை செய்த பொழுது காவல்துறையினை பார்த்ததும் வாகனத்தை ஓட்டி வந்த நகர் மற்றும் அவருடைய நண்பர்கள் வாகனத்தில் இருந்து இறங்கி ஓடியுள்ளனர். பின்னர் மினி டிப்பர் லாரியை சோதனை செய்ததில் அனுமதி இன்றி ஆற்று மணல் எடுத்து வந்தது தெரிய வந்துள்ளது. பின்னர் அந்த மினி டிப்பர் லாரியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் மணப்பாறை கு. பெரியபட்டி ஊராட்சி வடக்கு சேர்பட்டி அருணாச்சலம் மகன் பூமி பாலன் என்பவருக்கு சொந்தமானது என்றும், அவருடன் வந்த 2 நண்பர்கள் பில்லூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கிஷோர், பால சமுத்திரத்தைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் கோபாலகிருஷ்ணன் ஆகிய 3 நபர்களின் மீதும் மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அனுமதி இன்றி ஆற்று மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் 3 பேர் கைது மணப்பாறை போலீசார் விசாரணை

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!