February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

விழுப்புரம் நவ :26

விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் இந்திய எழுத்தறிவு திட்டம் சார்பில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை தலைமை ஆசிரியர் ஆனந்தன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
பட்டதாரிஅறிவியல் ஆசிரியர் தாட்சாயினி அனைவரையும் வரவேற்றார்.
உதவி தலைமை ஆசிரியர்கள் மகாதேவன் முருகன் வாஞ்சிநாதன் முன்னிலை வகித்தனர். இந்திய எழுத்தறிவு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ் சுகன்யா கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் தயார் செய்த பல்வேறு அறிவியல் சாதன பொருட்கள் மூலம் செயல்முறைகளை விளக்கினர் இதில் மாணவர்கள் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம், அறிவியலுக்கு முன்பும் அறிவியலுக்குப் பின்பும் வாழ்வியல் பற்றி விளக்கும் விதமாக காட்சி படுத்தி விளக்கினர். மற்றும் ராக்கெட் காற்றாலை மின்சாரம் நெட்டையால் செய்யப்பட்ட வீடுகள் போக்குவரத்து சிக்னல் என பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தினர்.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் மூன்று பரிசுகள் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது .இந்த கண்காட்சியை பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கண்டு களித்தனர் .
நிகழ்ச்சியை கணித ஆசிரியர் முருகன் ஒருங்கிணைத்தார்
ஆசிரியர் பாலு நன்றியுரை வழங்கினார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp