February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்..

500 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினர்…

ஈரோடு. நவ. 18

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே நடைபெற்ற சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் 500க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

தமிழ்நாடு முழுவதும் கால்நடை மற்றும் பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கான நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள அஞ்சூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, நல்ல செல்லிபாளையம் கிராமத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

இந்த சிறப்பு கால்நடைகள் மருத்துவ முகாமிற்கு, அஞ்சூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ் பிரகாஷ் மற்றும் துணைத் தலைவர் சரண்யா செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஈரோடு மண்டல கால்நடைகள் துறை இணை இயக்குனர் எஸ். பாஸ்கர் மற்றும் கால்நடைகள் துறை உதவி இயக்குனர் ஆர். எத்திராஜன் ஆகியோரின் மேற்பார்வையில் இந்த முகம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த முகாமில் அஞ்சூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களின் கால்நடைகளை முகாமிற்கு அழைத்து வந்து பல்வேறு சிகிச்சைகள் பெற்று பயனடைந்தனர்.

இந்த முகாமில் கால்நடைகளுக்கான, பசு, எருமை, ஆடு, கோழி, நாய் ஆகிய கால்நடைகளுக்கு குடல் புழு நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி உள்ளிட்ட கால்நடைகளுக்கான சிகிச்சைகள் சிறப்பாக அளிக்கப்பட்டது.

இதுபோன்று சிகிச்சைகள் 500க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு இந்த சிறப்பு கால்நடைகள் மருத்துவ முகாமில் அழைக்கப்பட்டது.

இந்த சிறப்பு கால்நடை முகாமில் வெங்கமேடு புதூர் கால்நடை உதவி மருத்துவர் நந்தகுமார், தாமரை பாளையம் கால்நடை ஆய்வாளர் திருமதி சண்பகம், அஞ்சூர் கால்நடை பராமரிப்பு உதவியாளர் நிதியரதி, தழுவம் பாளையம் கால்நடை பராமரிப்பு உதவியாளர் தனசேகரன், மற்றும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இந்த சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த முகாமில் 3 சிறந்த கால்நடை வளர்ப்போருக்கான மேலாண்மை விருதுகளும், மூன்று சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

இந்த சிறப்பு கால்நடை முகாமிற்கான ஏற்பாடுகளை அஞ்சூர் கால்நடை மருத்துவர் டாக்டர் வனிதா முன் நின்று சிறப்பாக செய்திருந்தார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp