February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.11.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தகவல்.

கள்ளக்குறிச்சி நவ 26

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நவம்பர் 2025-ம் மாதத்திற்கான விவசாயிகள்
குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.11.2025 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண்
விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல் துறை,
கால்நடைபராமரிப்புத் துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, வங்கியாளர்கள் மற்றும் பிறசார்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள்
கோரிக்கைகள் தொடர்பாகவும், தனிநபர் தங்கள் குறைகள் குறதெரிவித்துள்ளார் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp