February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

255 மனுக்கள் வரப்பெற்ற நிலையில் மேல் நடவடிக்கைக்கு உத்தரவு…

ஈரோடு. நவ. 25

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற பொது மக்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய மேல் நடவடிக்கைக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

வாரம் தோறும் திங்கள் கிழமை காலை 10 மணி அளவில் தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பொதுமக்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று காலை 10 மணி அளவில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மற்றும் இலவச வீட்டு மனை, வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுவை.

அந்த வகையில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 255 மனுக்கள் வரப்பெற்று, அவைகள் மேல் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு. சாந்தகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது) முகமது குதுரத்துல்லா உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp