சங்கராபுரம் நவ 22
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் ரங்கப்பனூர் கிராமத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் R.M.S.K.அர்ச்சனா காமராஜன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன், உதவி ஆசிரியர் பாலு கிராம சுகாதார செவிலியர் விமலா, மகளிர் சுய உதவி குழு சந்திரலேகா, நதியா அங்கன்வாடி பணியாளர் கவிதா, கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ரூபாவதி, உள்ளூர் காவல் நிலைய குழந்தை நல காவல் அலுவலர் ரகு ஆஷா, பணியாளர் வீரம்மாள், உள்ளூர் இளைஞர் அமைப்பு பிரதிநிதி மேகலா, குழந்தை பராமரிப்பு நிறுவன பிரதிநிதி சுமதி மற்றும் உறுப்பினர்கள் வல்லவி நித்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்களுக்கு விழிப்புணர் ஏற்படுத்தி பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் ஊராட்சி செயலாளர் திருமால்வளவன் நன்றி கூறினார்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!