திருச்சி. ஜுன் 24-
திருச்சி ரெட்டை வாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள அமிர்த வித்யாலயம் CBSE பள்ளியில் உலக யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதில் பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 900திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு ஆசனங்களை மைதானத்தில் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஜெயரங்கா இயற்கை மருத்துவமனையின் டாக்டர். திருமதி. கல்பனா தேவி (இயற்கை மருத்துவர்) கலந்து கொண்டு சிறப்பித்தார். பள்ளியின் முதல்வர் திருமதி. உஷாராகவன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்க, பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் வரவேற்புரை மற்றும் நன்றியுரை கூறினார்கள். இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என 900க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினர் அவர்கள் யோகாவின் முக்கியத்துவம் மற்றும் மாணவர்களின் உடல் மன ஆரோக்கிய சம்பந்தமான இயற்கை உணவுகளை எவ்வாறு உட்கொள்வது பற்றியும், பல்வேறு கருத்துக்களை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள். இந்த நிகழ்ச்சியை அமிர்த வித்யாலயம் பள்ளியின் யோகா மற்றும் உடற்கல்வித்துறை இணைந்து கடந்த 11 ஆண்டுகளாக சிறப்பான முறையில் செய்து வருகின்றனர்.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!