புத்தாநத்தம் ஜூன் 24
திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் – கணவாய்பட்டி செல்லும் சாலையில், போதை மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு விளம்பரப் பதாகை புளிய மரத்தில் தொங்கவிடப்பட்டிருப்பது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வைக்கப்பட்டுள்ள இந்த பதாகை, பள்ளி வளாகம் அல்லது பள்ளி அருகே மாணவர்கள் எளிதில் பார்க்கக்கூடிய இடத்தில் அமைக்கப்படாமல், சாலையோரத்தில் உள்ள புளிய மரத்தில் கட்டப்பட்டிருப்பதால் அதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் நிலையில், போதை மற்றும் புகையிலைப் பழக்கத்தின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் பள்ளி நுழைவாயில் அல்லது மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியில் வைக்கப்பட்டால் அதிக பயன் அளிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ தற்போது பல்வேறு சமூக வலைதளங்களில் பரவி விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, புளிய மரத்தில் தொங்கவிடப்பட்டுள்ள விழிப்புணர்வு பதாகையை அகற்றி, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு ஏற்ற இடத்தில் மீண்டும் நிறுவ வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், போதைப்பொருள் மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த அரசின் விழிப்புணர்வு முயற்சிகள் முழுமையான பலனை அடைய, இதுபோன்ற விளம்பரப் பதாகைகள் சரியான இடங்களில் அமைக்கப்பட வேண்டும் என்பதும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!