கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பேருந்து நிலையத்தில் த.வெ.க தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, அக்கட்சியினர் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு மத்தூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் விக்னேஷ் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய இணைச் செயலாளர் இப்ராகிம் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எழில், ஊத்தங்கரை தொகுதி உறுப்பினர் சேர்க்கை இணைச் செயலாளர் திருமால், ஒன்றிய இளைஞரணி ஹரிஹரன், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் பிரியா, முருகம்மாள், சத்யா, மற்றும் ஒன்றிய துணை செயலாளர் நிவேதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுகுமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, மத்தூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தலைவர் விஜய்யின் 52-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், இப்பகுதியைச் சேர்ந்த 52 தூய்மைப் பணியாளர்களுக்குப் புத்தாடைகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டு மகிழ்ச்சி பரிமாறப்பட்டது.
இந்த விழாவிற்கான முழு ஏற்பாடுகளையும் வழக்கறிஞர் மகேந்திரன் செய்திருந்தார். இதில் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் விக்னேஷ், வழக்கறிஞர்கள் மசூத், சையத் ஏசான், சாகுல், கிளைச் செயலாளர் ரின்ஷான், அஸ்கர், ஹரிஷ், சல்மான், சுரேந்தர் ஷகீல் மகளிர் அணி நிர்வாகிகள் கீர்த்தனா, நாகலட்சுமி, மணிகண்டன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் உட்பட திரளான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் முபாரக் 8428723357

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!