June 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பாஜகவிலிருந்து விலகிய நடிகர் பாண்டி ரவி – தமிழக வெற்றி கழகத்தில் இணைப்பு

புதுச்சேரி:

புதுச்சேரியைச் சேர்ந்த நடிகர் மற்றும் சமூக சேவகர்மான பாண்டி ரவி, சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகிய நிலையில், தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார்.

இந்த இணைப்பு நிகழ்வு, தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புசி ஆனந்த் அவர்களின் தலைமையில், கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது, தமிழக அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும், இந்த இணைப்புக்குப் பிறகு அங்கு இருந்த மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரிடம் நடிகர் பாண்டி ரவி ஆசிர்வாதம் பெற்று தனது புதிய அரசியல் பயணத்தை தொடங்கினார்.

நடிகர் பாண்டி ரவி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகத்தின் ஒரு முக்கிய அங்கமாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது அரசியல் அனுபவமும், சமூக சேவையும் கட்சியின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.