தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே. ஜி அருண் ராஜ் வலியுறுத்தல்..
திருச்செங்கோடு. ஜூன். 21
மருத்துவ படிப்பு மாணவர்களின் உயிரை காவு வாங்கும் நீட் தேர்வு முறை ரத்து செய்யப்பட வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே. ஜி அருண்ராஜ் வலியுறுத்துள்ளார்.
தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கே. ஜி அருண் ராஜ் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில், மருத்துவ படிப்பிற்கு விரும்பி தங்களை தயார் செய்து வரும் மாணவ மாணவிகள், நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையில் அவர்கள் மனம் உடைந்து தங்களின் இன்னுயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.
இந்த துயரமான சம்பவம் நீட் நுழைவுத் தேர்வு என்று ஒன்று வந்த நாள் முதல் இன்று வரை, சேலம் மாவட்டம் எடப்பாடி மாணவி தற்கொலை வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆயிரம் கனவுகளோடு 12 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, மருத்துவ படிப்பில் ஆர்வம் கொண்டு தாங்கள் ஒரு மருத்துவராக வர வேண்டும் என கனவு கண்டு, நீட் தேர்வை சந்திக்கும் இந்த மாணவர்கள் தற்கொலை என்ற முடிவை எடுத்து தங்களின் இன்னுயிரை மாய்த்துக் கொள்வது மிகவும் வருத்தமாகவும், ஏற்றுக்கொள்ள கூடியதாகவும் இல்லை.
எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வாகாது என்பதனை அனைத்து தரப்பு மாணவ மாணவிகள் மனதில் கொள்ள வேண்டும்.
எனவே இந்த துயர சம்பவங்களுக்கு முடிவு கட்டும் வகையில் மத்திய அரசின் பாடத்திட்டத்தில் உள்ள மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்.
இதற்கான முயற்சியை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அரசு எடுத்து வருகிறது. நேரத்தில் ஒன்றிய அரசும் மாணவர்களின் நலன் கருதி இந்த நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முக்கிய கொள்கைகளில், இரண்டு முக்கியமாக கருதப்படுகிறது. அது கல்வி மற்றும் சுகாதாரம். இந்த இரண்டிற்கும் இந்த அரசு மிகுந்த முக்கியத்துவம் வழங்கி வருகிறது.
இவ்வாறு தமிழக சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கே. ஜி அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

More Stories
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் மனையிடப்பட்டா வழங்குவதில் வெளிப்படையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் – வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி கோரிக்கை!
புதுச்சேரி: திரைக்கலையில் தேசிய விருதுகள் பெற்ற இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு, மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது