மணப்பாறைஎம்எல்ஏ கதிரவனுக்கு மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு தந்த த வெ க வினர்
1 min read
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக ரா.கதிரவன் அவர்களை கட்சியின் தலைவர் விஜய் அறிவிக்கப்பட்டார்
மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ரா கதிரவன் சட்டமன்ற தேர்தலில் அதிமுக திமுகவை விட அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்
வெற்றி பெற்ற சான்றிதழுடன் தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவர் விஜய் அவர்களை சென்னை தலைமை அலுவலகத்தில் சந்தித்து ஆசி பெற்று பின்னர் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொண்டு மணப்பாறை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்று இன்று காலை மணப்பாறை தொகுதிக்கு வருகை தந்தார்
மணப்பாறை ஆண்டவர் கோவில் அருகே தவெக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க வெடி வெடித்து இனிப்பு வழங்கி சிறப்பான வரவேற்பு தந்தனர்.
பின்னர் அங்கிருந்து திறந்த வேனில் நின்றபடி வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறினார்.
பின்னர் மணப்பாறை அருள்மிகு ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோவிலிலுக்கு வருகை தந்த எம்.எல்.ஏ. கதிரவனை கோவிலின் பரம்பரை அறங்காவலர் ஆர் வி எஸ் வீரமணி வரவேற்று ச பரிவட்டம் கட்டி சாமி தரிசனம் மேற்கொண்டார்.
பின்னர் அருகிலுள்ள ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிர்வாக தலைவர் ஹாஜி ஜே. முகமது அனிபா மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆசி பெற்றர்.
மேலும் புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்கு தந்தையை சந்தித்து ஆசி பெற்றார். மேலும் திறந்த வேணில் நின்றபடி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்
தமிழக வெற்றி கழக மாவட்ட அலுவலத்தில் நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களை சந்தித்து தேர்தலில் வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!