June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விக்கிரவாண்டி தொகுதியில்மாற்றுக் கட்சியினர்திமுகவில் இணைந்தனர்!

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட டட் நகர் பஞ்சாயத்து, இந்திரா காந்தி கிளையைச் சேர்ந்தவர்கள் மற்றும் கணை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சியிலிருந்து விலகி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. அன்னியூர் சிவா அவர்கள் தலைமையிலும், புதுச்சேரி திமுக அமைப்பாளர் திரு. இரா. சிவா அவர்கள் முன்னிலையிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.

இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கல்பட்டு ராஜா, ஊராட்சி மன்ற தலைவர், கிளைச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.