திருச்சி மாவட்டம் மணப்பாறை பெரியார் சிலை அருகே மணப்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் பி எல் விஜயகுமார் அவர்களுக்கு ஆதரவாக திரைப்பட நடிகர் ரவி மரியா தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
தேர்தல் பரப்புரையில் அவர் பேசியதாவது:
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் கொண்டு வந்து சிறப்பான முறையில் ஆட்சி நடத்தியவர் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தாய்மார்களுக்கும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் பல்வேறு திட்டங்களை வாரி வழங்கி சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் நிகழ்த்தி காட்டியவர் தான் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்
தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் பெண்களுக்கு பல்வேறு கவர்ச்சிகர திட்டங்களை வழங்கி 12ம் வகுப்பு படித்த மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் பதிவு செய்திருந்தால் போதும் அவர்களுக்கு மாதம் தோறும் 2000 இதேபோல் முதியோர் உதவித்தொகை 2000 மாக உயர்த்தி அதிமுக அரசு அமைந்த உடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் இப்படி அடுக்கடுக்கான பல திட்டங்களை தீட்டி மக்களின் அடிப்படை வசதிகளை உயர்த்தி காட்டியவர் தான் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்
தற்போது மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கிடும் டாக்டர் பி எல் விஜயகுமார் அவர்கள் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் அவருக்கு உங்களது வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும் நிச்சயம் அவர் மணப்பாறை தொகுதிக்கு பல்வேறு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வார் என்று தேர்தல் பரப்புரையில் பேசினார்

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!