October 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் மதுக்கடைகள் மூடல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக சட்டசபை தேர்தல் வரும், 23ல், நடக்கிறது.- இதை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், மதுக்கூடங்கள் அனைத்தும் வரும், 21, காலை, 10:00 மணி முதல், 23 இரவு, 12:00 மணி வரை மூடப்படுகிறது. அதே போல ஓட்டுப்பதிவு நாளான மே, 4ல் மதுக்கடைகள் மூடப்படுகிறது. விதிமுறைகளை மீறி, விற்பனை செய்தாலோ, மதுபானங்களை கொண்டு சென்றாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307