தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு ஆர். கதிரவன் அவர்களுக்கு ஆதரவாக, கட்சியின் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்குகள் கோரி மணப்பாறை தெற்கு ஒன்றியம் செட்டியபட்டி ஊராட்சிக்குட்பட்ட தாமஸ் நகர் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.இந்த பிரச்சாரத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு மணப்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஆர் கதிரவன் பிரச்சாரத்தில் முந்துகிறார்
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டப்பேரவை தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் ஆர் கதிரவன்கிராமம் கிராமமாக சென்று ஒவ்வொரு வீட்டிலும் விசில் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தனது பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையம்பட்டி மணப்பாறை மருங்காபுரி துவரங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தொண்டர்கள் தினம்தோறும் காலை மாலை நேரங்களில் கிராமப் பகுதியில் வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விசில் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று கோவில்பட்டி வாரச்சந்தையில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் ஆர் கதிரவன் தொகுதிக்கு உட்பட்ட மக்களிடம் நேர்மையான திறமையான வெளிப்படைத்தன்மையுடன் பணி செய்ய ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் என வாக்காளர்களிடம் விசில் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
பல்வேறு கிராமங்களில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் ஆர் கதிரவனுக்கு நெற்றி திலகமிட்டு பொதுமக்களும் இளைஞர்களும் சிறப்பான வரவேற்புகளை வழங்கி வருகின்றனர் மேலும் தற்போது மணப்பாறை சட்ட மன்ற தொகுதியில் தனக்கென பாணியில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி தற்போது தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் முந்தி வருகிறார்
மக்களிடம் எளிமையான முறையில் வேட்பாளர் ஆர் கதிரவன் வாக்கு சேகரிக்கும் செயல் தொகுதியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது

































More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..