புதுச்சேரி | மார்ச் 31, 2026
புதுச்சேரி வில்லியனூர் சட்டப்பேரவைத் தொகுதியில், தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் பூக்கடை ரமேஷ் இன்று விறுவிறுப்பான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அவர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார்.
பிரச்சாரத்தின் போது தனது தேர்தல் சின்னமான ‘விசில்’ சின்னத்தைக் காண்பித்து, அதற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேட்பாளர் பூக்கடை ரமேஷ் கேட்டுக்கொண்டார்.
வில்லியனூர் மாடவீதிகள் மற்றும் சுற்றுவட்டாரக் குடியிருப்புப் பகுதிகளில் பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
குடிநீர் வசதி, சாலை மேம்பாடு மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட தவெக-வின் தேர்தல் கால வாக்குறுதிகளை மக்களிடம் விளக்கிக் கூறினார்.
பிரசாரத்தின் போது முதியவர்கள் மற்றும் பெண்களிடம் ஆசி பெற்ற அவருக்கு, பல இடங்களில் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்தப் பிரசாரத்தின் போது தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கட்சியின் கொடிகளை ஏந்தி, மேளதாளங்கள் முழங்கச் சென்றனர். “விசில் சின்னத்தில் வாக்களிப்போம், மாற்றத்தை உருவாக்குவோம்” என்ற முழக்கங்களுடன் வில்லியனூர் பகுதி முழுவதும் இன்று தேர்தல் களம் சூடுபிடித்திருந்தது.

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..