April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறையில் .திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ப அப்துல் சமதுக்கு சிறப்பான வரவேற்பு தந்த கூட்டணி கட்சியினர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்ட மன்ற தொகுதி திமுக கூட்டணிக் கட்சி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளரும் தற்போதைய எம் எல் ஏவுமான ப. அப்துல்சமது அவர்களுக்கு திமுக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என 5000 க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள் அப்துல் சமதுக்கு மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு தந்தனர்.

முன்னதாக திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கலைஞர் திரு உருவ சிலைக்கு வேட்பாளர் ப. அப்துல் சமது மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அங்கிருந்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக புறப்பட்டு பொத்த மேட்டுப்பட்டியில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்தனர் பின்னர் அங்கிருந்து பட்டாசு வெடித்தும் மேளதாளங்கள் முழங்க மணப்பாறை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும் அதன் பின்னர் ஊர்வலமாக புறப்பட்டு மணப்பாறை பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா சிலையிலும் மாலை அணிவித்து பொதுமக்கள் மத்தியில் ப. அப்துல் சமத் எம். எல்.ஏ வாக இருந்த போது தான் செய்த மக்கள் நல பணிகளை விளக்கி பேசி மீண்டும் தமிழகத்தில் 2.0 திமுக சிறப்பான ஆட்சி அமையவும் மணப்பாறை தொகுதியில் போட்டியிடும் தமக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

திமுக , காங்கிரஸ், தேமுதிக, மமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, திராவிடர் கழகம் மஜக, தமிழர் தேசம் கட்சி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள் என 5000 த்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மிக பிரமாண்ட வரவேற்பளித்தனர் .

Facebook
YouTube
Instagram
WhatsApp