கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டிணம் அருகே தனியார் கல்லூரி பேருந்தை வழி மறித்து மது போதையில் பட்ட பகலில் மாணவியை கடத்த முயற்சி செய்து சக மாணவிகள் தடுத்ததால் மது போதையில் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீடியோ ஆதாரம் கசிந்ததையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்க துரை அவர்கள் உத்தரவின் பேரில் வீடியோவை ஆதாரமாக வைத்து காவல் துறை அதிகாரிகள் வலை வீசி தேடியதில் வீடியோவில் உள்ள நபர்கள் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள செட்டிமாரம்பட்டி பகுதியை சேர்ந்த சர்க்கரை மகன் தங்கராஜ் என்பது தெரிய வந்தது
உடன் கூட்டாளிகள் மூன்று பேரை காவேரிப்பட்டிணம் காவல் நிலைய போலீஸ்சார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறை அதிகாரிகள் துரித நடவடிக்கையால் உடனடியாக கல்லூரி பேருந்தை வழி மறித்து மாணவியை தாக்கிய போதை ஆசாமிகளை பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election