April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

இ.எஸ்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் INNOBYTE 2K26 தலைப்பில் கருத்தரங்கம்.

விழுப்புரம் மார்ச் 31

விழுப்புரம் இ. எஸ் கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான
விழுப்புரம் இ.எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இனோபைட் 2கே26 தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது .

நிகழ்ச்சிக்கு
இ.எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் தலைவர் எஸ்.செல்வமணி சாமிக்கண்ணு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினர்.
எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் முதல்வர் முனைவர் இந்திரா வரவேற்புரை ஆற்றினார் சிறப்பு விருந்தினராக (Capgemini FS India CSE LEAD) நித்தியானந்தன் செல்வகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த கருத்தரங்கில் விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சுற்றியுள்ள பொறியியல் கல்லூரிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு மாணவ மாணவியர்கள் வருகை தந்து பல்வேறு தொழில்நுட்ப அறிவியல் மற்றும் தொழில்நுட்பமற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களது தனித்திறனை வெளிப்படுத்தினர்.

இதில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை, கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் இணைந்து ஒருங்கிணைத்தனர்.

நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள்,துணை பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

Facebook
YouTube
Instagram
WhatsApp