திருச்சி மார்ச் 28
திருச்சி பெரிய மீழகுபாறை யில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இயங்கும் ஜனகம் இஸ்மாயில் அரங்கில் ஏஐடியூசி தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளனம் மாநில குழு கூட்டம் நடைபெற்றது
இக் கூட்டத்திற்கு ஏஐடியூசி தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளன மாநில
தலைவர் நடராஜன் தலைமை வகித்தார் மாநில பொதுச் செயலாளர் இராமச்சந்திரன் நடைபெற்ற வேலைகள் கூறித்து பேசினார் நடைபெற்ற வேலைகள் கூறித்து விவாதித்து ஏற்று கொள்ளபட்டது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் நல்லக்கண்ணு அவர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாசிச பாஜக அணியை முறியடிக்க மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டது.
நமது வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது என்றும், தேர்தல் நிதி ஒவ்வொரு தொழிலாளியும் ரூ.100 வழங்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்
தமிழ்நாட்டில் மக்கள் தொகை அடிப்படையிலும் குடியிருப்புகள் எண்ணிக்கைக்கு ஏற்ப உள்ளாட்சிகளில் தூய்மை பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
தூய்மை பணியாளர் அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஒப்பந்தமுறை, அவுட் சோர்ஸிங், மற்றும் சுயநிதிக்குழு மூலம் நியமனம் போன்றவற்றை ஒழிக்க வேண்டும்.7. தொழிலாளர் நலத்துறை 11.10.2017ல் வெளியிட்ட அரசாணை 2D எண் 62ன்படி உள்ளாட்சிகளில் குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும்.
கொரனா நிதி உடனடியாக அனைத்து துாய்மை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் தேர்தல் பணியில் உயிர் இழந்த ஒப்பந்த தூய்மை
பணியாளர் மணிகண்டன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
உள்ளாட்சிகளில் பெண் தொழிலாளர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் தடுக்க ஒவ்வொரு உள்ளாட்சிகளிலும் புகார் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சின்னசாமி Dr.சாந்தி செல்வராஜ், தண்டபாணி, மீனாள் சேதுராமன், சுரேஷ். சுப்பிரமணியன், மணி, சங்கையா, கண்ணன், முருகன், லெட்சுமணன், முருகன், திருநாவுக்கரசு. முனியன், செல்வி, அருள். தனசேகரன், மணி, பெரியசாமி உள்ளிட்ட மாநில குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் மாநில பொருளாளர் பீட்டர் துரைராஜ்.நன்றி கூறினார்

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election