நடைபெற்று வரும் ஈரான், இஸ்ரேல் அமெரிக்கா போரின் காரணமாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் பாதிக்கபட்டுள்ளனர். மேலும் கேஸ் விலை உயர்வும் அதிகரித்துள்ளது. மேலும் ஹோட்டல்கள், மற்றும் பல்வேறு கடைகள் நடத்த முடியாமலும் இருந்து வருகின்றன. இதனால் ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரத்தில் இதில் பெருமளவில் பாதிப்படைந்துள்ளனர். இந்த தட்டுப்பாடு விலை உயர்வுக்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்து காமராஜர் நகர் மக்கள் சேவை இயக்கம் சார்பில் சாரம் அவ்வை திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இயக்க செயலாளர் கோபி தலைமையிலும் தலைவர் நிர்மலா கோபி முன்னிலையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில். காமராஜர் நகர் தொகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து இந்தத் தட்டுப்பாடும் விலை உயர்வும் தொடருமேயானால் எங்கள் போராட்டம் அரசுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் எனவும் இயக்கச் செயலாளர் கோபி எச்சரிக்கை விடுத்தார்.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, விலை உயர்வை கண்டித்து காமராஜர் நகர் மக்கள் சேவை இயக்கம் சார்பில் சாரம் அவ்வை திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election