February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மனிதாபிமானம் இல்லாத சொந்த குடும்பத்தினர்…

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனாதையாக விடப்பட்ட முதியவர்…

ஈரோடு.நவ.04

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தன் குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, அனாதையாக ஒரு முதியவர் இரண்டு நாட்களாக கிடந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை பழைய மற்றும் புதிய கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது பல்வேறு விதமான புதிய அதிநவீன உபகரணங்களை கொண்டு மருத்துவ பயனாளிகளுக்கு நாள்தோறும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் குழந்தைகள் என இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இதில் மருத்துவப் பயனாளிகள் பிரிவிலும் மற்றும் வெளி மருத்துவ பயனாளிகள் பிரிவிலும் நாள்தோறும் கூட்டம் அலைமோதுவது வழக்கம். பல்வேறு உடல் ரீதியான உபாதைகளை சரி செய்ய இவர்கள் நம்பி வருவது ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையை தான்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்த, அருணாச்சலம் என்ற முதியவரை சிகிச்சைக்காக அவரின் குடும்பத்தினர் குறிப்பாக மகள் மற்றும் உறவினர்கள் காரில் ஏற்றி வந்து நேற்று இரவு அரசு மருத்துவமனை வளாகத்தில், ஆதரவற்ற நிலையில் அனாதையாக இறக்கிவிட்டு சென்றதாக தெரிய வருகிறது.

அந்த முதியவரால் சரியான முறையில் நடக்க முடியாமலும், பேச முடியாமலும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருந்த நிலையில் இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு முழுவதும் மருத்துவமனை வளாகத்தில் கொசுக்கடியிலும் கடும் குளியலிலும் படுத்திருந்த அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பொதுமக்கள் சிலர் அவருக்கு உணவு மற்றும் டீ குடிநீர் போன்றவற்றை வழங்கினர்.

சுமார் 80 வயது மதிக்கத்தக்க அந்த வயது முதிர்ந்த முதியவர் அருணாசலத்தை சிகிச்சைக்காக அழைத்து வந்து அவரின் குடும்பத்தினர் முறையாக மருத்துவமனையில் அனுமதிக்காமல், ஆதரவற்ற நிலையில் அனாதையாக மருத்துவமனை வளாகத்தில் இறக்கிவிட்டு சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

தான் பெற்ற மகளாலும், சொந்த குடும்பத்தினராலும் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒரு முதியவர், அனாதையாக அரசு மருத்துவமனை வளாகத்தில் விடப்பட்டு சென்றது மனிதாபிமானம் என்பது எங்கு உள்ளது..? என்ற கேள்வியை அனைவரின் மனத்திலும் எழாமல் இல்லை

Facebook
YouTube
Instagram
WhatsApp