June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விழுப்புரம் இ.எஸ் கல்வி குழுமத்தின் சார்பில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்

விழுப்புரம் 11

விழுப்புரம் இ.எஸ் கல்வி குழுமத்தின் சார்பில் ஏழுமலை தொழில்நுட்ப கல்லூரி மற்றும் இ.எஸ் கல்வியியல்
கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தொழுநோய் விழிப்புணர்வு மற்றும்
தேசிய குடற்புழு நீக்க நாள் குறித்தும் விழுப்புணர்வு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு
இ.எஸ் கல்வி குழுமத்தின்
இவ்விழாவிற்கு
தலைவர்
எஸ்..செல்வமணி தலைமை தாங்கினார்., இஎஸ் கல்வியியல்
கல்லூரி முதல்வர் முனைவர்
தே.செந்தில்முருகன் அனைவரையும் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக வட்டார சுகாதார
மேற்பார்வையாளர் ராஜாராம், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர்
போஸ்கோ, கிராம சுகாதர செவிலியர் அஞ்சலை, சுகாதார ஆய்வாளர்
பிரித்விராஜ் மற்றும் உடன் வருகை புரிந்துள்ள ஊழியர்களும் கலந்து
கொண்டு தொழுநோய் “மைகோ பாக்டீரியம் லெப்ரே” என்கிற நுண்ணிய
கிருமிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாணவர்களுக்கு
கருத்துகளையும், ஆலோசனையும் வழங்கினார்கள். மேலும் முகாமில்
மாணவ மாணவிகளும் குடற்புழு மாத்திரை வழங்கினர். இதில் கல்வியியல் கல்லூரி மற்றும் ஏழுமலை
தொழில்நுட்ப கல்லூரி துணை பேராசிரியர்கள் மற்றும் மாணவ
மாணவிகள் கலந்து கொண்டனர்.