February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

​கதிர்காமம் எம்.எல்.ஏ-வை சந்தித்த ஆனந்த விநாயகர் கோவில் புதிய நிர்வாகிகள்: சால்வை அணிவித்து வாழ்த்து!

​புதுச்சேரி:

புதுச்சேரி கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட ஆனந்தா நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஆனந்த விநாயகர் ஆலயத்தின் புதிய நிர்வாகக் குழுவினர் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த 04-01-2026 அன்று ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த புதிய நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
​இந்நிலையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலய நிர்வாகிகள், கதிர்காமம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.பி. ரமேஷ் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இந்தச் சந்திப்பின் போது,
​நிர்வாகிகள் எம்.எல்.ஏ அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
​ஆலயத்தின் புதிய நிர்வாகக் குழு நியமனம் குறித்த விவரங்களை அவரிடம் முறைப்படி தெரிவித்தனர்.
​தொடர்ந்து ஆலய வளர்ச்சிப் பணிகள் மற்றும் திருவிழாக்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது ஆலயத்தின் நட்டாண்மை A. செம்மணகிரி, தலைவர் S. ஜெகதீசன், துணைத் தலைவர் S. முருகையன், செயலாளர் S. குமார் (எ) முருகன், துணைச் செயலாளர் G. மணிகண்டன், பொருளாளர் S. ஜீவானந்தம் மற்றும் ஆலய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
​எம்.எல்.ஏ அவர்கள் புதிய நிர்வாகிகளுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், ஆலயப் பணிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதி அளித்தார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp