June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்தஞ்சாவூர் மாவட்ட மையம் சார்பில்

எஸ் ஐ ஆர் பணியினால் ஏற்படும் இடர்பாடுகளை களைந்திட மாவட்ட தலைநகரில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

தஞ்சாவூர் நவ 21.

நடைபெற்ற பெருந்திரள்.ஆர்பாட்டத்திற்கு.
கோ வி.பாலாஜி தலைமை ஏற்றார்.

மாவட்டச் செயலாளர்.செபஸ்டின். சிறப்புரையாற்றினார்

நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
தோழர்கள்.
குமாரவேலு.
சுரேஷ்குமார். ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.

தோழர்கள்.
முரளி.
ராஜமாணிக்கம். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தோழர்கள்.
கஜேந்திரன்.
பக்கிரிசாமி.
லெட்சுமணன். ஆகியோர் கருத்துரையாற்றினர்.

சிறப்பு அழைப்பாளர்களாக
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் தஞ்சை மாவட்ட பொருளாளர்.
தோழியர்.லதா.
மற்றும் ஏனைய உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

. ஆர்ப்பாட்டத்தின் போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும்

அரசு விடுமுறை நாட்களில் இந்த பணிகளை தவிர்க்க வேண்டும்.

ஊழியர்களின் பணி சுமையை குறைக்கும் வகையில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்

அங்கன்வாடி ஊழியரின் தற்கொலைக்கு முயற்சிக்கு காரணமான கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் நிறைவாக தோழர் தினேஷ்குமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.

தஞ்சை மாவட்ட செய்தியாளர்
மா.மதிவதனன்.