செஞ்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கிட்டு படிவம் வழங்கும் பணியினை விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்…….
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கிட்டு படிவம் வழங்கும் பணி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வருகிறது. செஞ்சி ஒன்றியம் கோணை ஊராட்சி பாகம் எண் 237, 240 அப்பம்பட்டு மற்றும் கவரை ஊராட்சி பாகம் எண் 284 கவரை மெயின்ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருதற்கான கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கானபணிகளை திமுக நிர்வாகிகள், பாகம் முகவர்கள். டிஜிட்டல் ஏஜென்ட் நிர்வாகிகள் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார் .
ஆய்வின்போது செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சையத் உஸ்மான்,மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, வனக்குழு தலைவர் ராமு,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் வாகித், நிர்வாகிகள் மணிபாலன், வீரப்பன், முத்து, நாகமுத்துஉள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!