கோவை பி எஸ் ஜி மருத்துவமனை B பிளாக் வளாகத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் 3 2 4 2 – C மாவட்டத்தின் சார்பாக பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் நடமாடும் வாகனம் துவக்க விழா நடைபெற்றது.
இந்த சேவை திட்டமானது லயன்ஸ் மாவட்டம் 3242 C நிதி உதவிகளும்,அருணா அபை ஆஸ்வால் அறக்கட்டளை,கிராப்ஸ் மேன் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு நிதி உதவி மற்றும் பி எஸ் ஜி மருத்துவமனை தொழில்நுட்ப உதவியாளும் நிறைவேற்றப்பட்டது.
இவ்விழாவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் முன்னாள் மாவட்ட ஆளுநர் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தமிழ் மாநில தலைவர் லயன் ஆர் பழனிசாமி அனைவரையும் வரவேற்றார்.
லயன்ஸ் மாவட்டம் 3242 C ஆளுநர் லயன் பி.எஸ் செல்வராஜ்,திட்ட தலைவர் லயன் ஆர்.நித்தியானந்தம்,முதன்மை விருந்தினர் பன்னாட்டு இயக்குனர் லயன் எஸ்.டி.சீனிவாசன் சிறப்பு விருந்தினர்கள் முன்னாள் பன்னாட்டு இயக்குனர் லயன் அருணா ஆஸ்வால் பி எஸ் ஜி புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குனர் டி.பாலாஜி,கிராப்ஸ் மேன் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் ரவி கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் பன்னாட்டு இயக்குனர்கள் லயன் ஜி.ராமசாமி,லயன் எம்.நாகராஜன்,லயன் கே.தனபாலன்,லயன் ஆர்.மதனகோபால் மற்றும் பொள்ளாச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சண்முகசுந்தரம்,கூட்டு மாவட்ட தலைவர் லயன் டி.செல்வம்,கூட்டுமாவட்ட செயலாளர் லயன் இ.விஸ்வநாதன்,கூட்டு மாவட்ட பொருளாளர் லயன் ஏ.ராஜசேகர் 3242 சி மாவட்டத்தின் முதலாம் துணை அட்வகேட் சூரி.நந்தகோபால்,இரண்டாம் துணை ஆளுநர் லயன் பி.என்.பாஸ்கர்,முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் லயன் எம்.ஜீவானந்தம்,லயன் சாரதா மணி பழனிசாமி,முன்னாள் கூட்டு மாவட்ட தலைவர்,ஆர் என் கருணாநிதி லயன் என் நடராஜன்,லயன் எஸ் ராம்குமார், ஜி எம் டி ஒருங்கிணைப்பாளர் லயன் எஸ் செந்தில்குமார் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளும் லயன்ஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவை பிஎஸ்ஜி மருத்துவமனையின் திரு ஜானகிராம் லயன் சி முத்துசாமி ஒருங்கிணைத்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…