சேலம், நவ.11-
சேலம் பச்சப்பட்டி ஸ்ரீ செல்வ கணபதி மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவன தலைவர் வி கே பிரகாஷ் -சிந்துஜா சிறந்த சமூக சேவகர்கள். இவர்களது மகன் எஸ்.பி .ஷாம் (வயது 13 ). கிச்சிபாளையம் ஜெய் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 9- ந் தேதி சேலம் குரங்கு சாவடி பகுதியில் உள்ள
ARISE இன்டர்நேஷனல் பள்ளியில் நான்காவது எலீட் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் – 2025”
இந்தப் போட்டி ‘ஷோபுகாய் ஷிட்டோ-ர்யூ கராத்தே ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா’ அமைப்பால்
ஹன்ஷி அல்தாஃப் ஆலம், தமிழ்நாடு விளையாட்டு கராத்தே சங்கத்தின் (TSKA) பொதுச் செயலாளர் தலைமையில்,
சென்சாய் ஷென்பகராய், சேலம் மாவட்ட கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் ஒருங்கிணைப்பில்,
சேலம் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி சிறப்பாக நடத்தப்பட்டது.
ஜே.எஸ்.கே.ஏ (Japan Shotokan Karate Academy)-யைச் சேர்ந்த மாணவர் ஷாம். எஸ். பி.,
நடைபெற்ற கராத்தே போட்டியில் பங்கேற்று,
கத்தா பிரிவில் முதல் இடமும், குமித்தே பிரிவில் இரண்டாம் இடமும் பெற்றுள்ளார்.
கராத்தே போட்டியில் சாதனை படைத்த மாணவன் ஷாம்யை சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜப்பான் ஷோட்டோகன் கராத்தே அகாடமி (ஜே.எஸ்.கே.ஏ.) கிச்சிப்பாளையம் மற்றும் அம்மாபேட்டை கிளை, சேலம் மாநகராட்சி 43-ஆவது வார்டு கவுன்சிலர் எம்.குணசேகரன், சேலம் மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே-டோ அசோசியேஷன் சங்கத்தின் தலைவர் ஸ்ரீநிவாசன், செயலாளர் செண்பகராஜ், பொருளாளர் மற்றும் அவரின் பயிற்சியாளர் மாஸ்டர் பி. சரவணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சேலம் கிச்சிபாளையம்,ஜெய் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவன்மாவட்ட அளவில் கராத்தே போட்டியில் முதலிடம்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!